மனிதத்தின் அடிப்படை உணர்ச்சி; உணர்ச்சி வெளிப்படும் உணர்வின் அடிப்படைகளுக்கு மனிதபாலினச் சாயங்கள் பூசப்படுவதுண்டு. பாலூட்டப்பட்ட உணர்ச்சிகள் மனிதத்தைத் திரித்துத் போடும்.
சில சாயம் பூசப்பட்ட உணர்ச்சியின் வெளிப்பாடுகள் பாலினத்திற்கு அப்பாற்பட்டவை என்ற கருவைத் தாங்கி நிற்கிறது இக்கவிதைத் தொகுப்பு.
1. வாலிபனின் பிரிவின் தாகம்
2. தலைவனின் மனக்கனல்
3. தந்தைக்கான ஏக்கம்
என முப்பாகங்களாய், மனித உணர்வின்கனம், மனிதத்தின் வலியின் நெருக்கம், சாம்பல்படாத உணர்ச்சியின் கோப்பு, சமூக அறத்தின் திரிபுகளின் முகமூடியை அவிழ்க்கிறது.