தமிழ்க்கவிதை நூல் வெளிப்பாட்டில் புதிய அத்தியாயமாய் இந்நூல் முகம் காட்டுகிறது. கதிரின் கவிதைகள் உலகத்தரத்தில் தமிழின் தளத்தை உயர்த்திப் பிடிக்கின்றன. தொழில் நுட்ப அணுகுமுறையில் புதிய பரிமாணம் நோக்கி நகர்கிறது. காதல் இல்லாத கவிதையில்லை. கவிதை உணர்வில்லாமல் காதல் இல்லை. மெல்லிய கோடுகளில் சித்திரம் சிலிர்ப்பதைப் போல் கடைப்பார்வையில் கூட கவிதை நளினமாகவதைக் காண முடிகிறது. இக்கவிதைத் தொகுப்பில் காதல் மையல் கொண்டிருப்பதைப் போல் சமூக சுவாசமும், மானுட நேசமும் கொப்பும் கிளையுமாய்த் துளிர்விட்டுப் பச்சை படர்ந்திருப்பதைக் காண முடிகிறது. இத்தொகுப்பின் ஈற்றில் சங்கமித்துள்ள இசை லயம் ஆதிதாளத்தோடு ஆலாபனை புரிவதைக் கேட்க முடிகிறது. குறுங்கவிதை, புதுக்கவிலை, இசைப்பாடல் என்னும் முப்பரிமாணமும் முப்பட்டைக் கண்ணாடியாகிக் கவிதை பிம்பம் உயர்ந்து நிற்கிறது.
Kathirin Kavithaigal provides a new dimension to Tamil Poetry; it espouses Tamil literature to world-class standards through contemporary design and thoughts. Techniques and Expressions in this book provide Tamil Books & Publications a fashionable look. Context of love diminishes without a poetic sense; a poetic sense enhances it and born with it; you could feel the sense of it from this book. A fine art is identified through its strokes; so as you could find Kathirin Kavithaigal becoming a fine literature through right use of rich vocabulary from ever green classic language. Love, Environment, Social aspects, and humanity are focal point of this collection; as you read through the book you can hear the tunes and beats of the songs composing at rear. As a prism converges different wavelengths of light; you could feel poems converging together with contemporary design and classic notes to question, to love, to enhance, to embrace and enables to evolve our thoughts.
Kiran
Nice