ரூமி,
ஆன்மக் காதலர்,
ஆன்ம ஆர்வலர்,
காதல் கவிதைமூலம்
இறைவனைக் காண்பவர்,
காதலுடன் இறைவனைக் காண்பவர்,
தீராத மானுடப் பண்புக் காப்பாளர்,
மனித அறிவின் விளிம்பு கற்பனை
என்பதை உணர்ந்து அதைக் கவிதை
வழி நிறுவியவர்!
இதுவே யாம் ரூமியின் கவிதைகள் மூலம் அவரை அறிந்தது.
எம்மை ரூமி தொட்ட கவிதைகளை தமிழ்த்தாய்க்கும் உங்கள் ஆன்மாவிற்கும் சாட்சியாக்குகின்றேன்.
அகம் ஒளிரட்டும்!