இக்கவிதைத் தொகுப்பு, பேனா முனையில் ஒற்றைக்கால் தவம். அதன் ஊசி முனையில் அரிவாளோடு ஒரு சண்டை. மரங்களை, உயிர்களை நேசிக்கும் எழுத்தாளனின் அகக்கூவல். இயற்கையைக் கூறு போடும் அதிகாரத்திற்கும், மனித மெளடீகத்திற்குமான எதிர்க் குரல். இயற்கை மீது மனிதன் நடத்தும் போரின் அபாய ஒலி. இயற்கைத் தாயின் கருவறுப்பைத் தடுக்க எழும் ஆறாத மனத்துடிப்பைக் காண்பீர். இலக்கியத்தின் பணி மனித மேம்பாடு; இருவரிக் கவிதைகள் பல சொற்பொழிவுகளுக்குச் சமமானதாய்ச் சீறும். சரிந்து கிடக்கும் மனிதத்தின் பார்வையை நிமிரச்செய்ய ஒரு முயற்சி. சில எளிய நினைவுகளை நிழலாடச் செய்யும், உங்கள் தோள்களைத்தட்டி, திரும்பிப்பார் என அழைக்கும் குரலும் கேட்கும். ஒரு கவிதைக்குள் பல எண்ணப் புதையல்கள், வண்ணமிக்க கலடியாஸ்கோப் போலவும் ஒளிரும்.
சுருக்கமாக; சுருக்குப்பை பல ஆயுதங்களைப் பேனா முனையில் தாங்கி நிற்கிறது,
• வெட்டப்பட்ட மரங்கள் பறவைக்காக கூக்குரலிடும்.
• பலர் மெளனத்தைக் கேள்வியாக்கும்.
• அகம் ஆழ்ந்த மெளன கேள்விகளுக்குப் பதில் தேடும்.
• கண்டம் தாண்டிய கடவுச்சீட்டுகளைக் கிழித்துப் போடும்.
• உறவிற்குப் பலமிடும், பாலமிடும்.
• அதிகாரத்தின் அலட்சியங்களை நிர்மூலமாக்கும்.
• சமூக அவலங்களை மனிதக்குப்பையாய் அள்ளும்.
Surkkupai, collection of poems is a one-legged penance at the tip of a pen. A fight with the scythe at the tip of pen’s needle, An introspection of a writer who loves trees and life. It is voice to oppose the power that divides nature and to human, it is an alarming sound of man’s war on nature. You will find the unrelenting heartbeat that arises to prevent natural mother destruction. The work of literature is human development; Two-line poems are synonymous with many discourses. An attempt to sharpen the vision of a collapsing human being. Some simple memories will be overshadowed, and a voice will be heard tapping you on the shoulder and calling you back. Many thought treasures within a poem shine like a colorful kaleidoscope.
In short; ‘Surkkupai’ holds several arms at the tip of the pen
• The felled trees will cry out for the bird.
• Many will question the silence.
• Mind seeks answers to deep silent questions.
• Tear off flying passports across the continent.
• Strengthens and bridges the relationship.
• Eradicate the negligence of power.
• Measuring social tragedies as a human bag.