வாலறிவன், நவீன ஆன்மீகக் கவிதைகளின் தொகுப்பாகும். இது நீங்கள் தொடங்கும் பரிமாணத்திலிருந்து பரிணமிக்கவும் மாற்றியமைக்கவும் கடக்கவும் உதவும். வாலறிவன் இயற்கையின் மறைவான நுண்ணறிவுகளை வழங்குவதோடு, எல்லாவற்றின் அறிவைப் பெறக்கூடிய ஒருங்கிணைந்த ஆன்மாவை வெளிப்படுத்தும். ஆன்மா வாழ்க்கையில் எல்லா மாற்றத்தையும் தரவல்லது. அதன் உண்மையான தன்மையை அறிந்து கொள்வதற்கான ஒவ்வொரு முயற்சியும் வற்றாத ஆற்றலையும் நிரந்தர மாற்றத்தையும் தரும், வாழ்க்கையை அணுகுவதற்கும், முன்னோக்கிப் பயணத்திற்குத் தயாராவதற்கும் புரிதலை வழங்கும்.
வெளிப்படாது உள்ளுறைந்த ஒன்றை வெளிப்பட்ட மற்றொன்றிலிருந்து புரிந்துகொள்ள முடியும் அப்படியே புரிந்துகொள்ளுங்கள் உங்களுக்கு இயன்றவரை வாலறிவனை!
அசையாமல் அசைக்கிறாய்
என்று உன்னை அறிந்தவர் யாரோ?
உன்னைக் கண்டு உருகாதாரும் உண்டோ?
ஆதிநாதா, துணையாய் நீ வருவாய்
கண்ணைத் திறந்து பார்,
கடவுள் கவலைக்கிடமா?
புரிதலில் வாழ்கிறார் அவர்!
கேள்வி பதிலுக்கு அப்பாற்பட்டவனாய்
இறைத் தேன் எடுக்க விரும்பு!
ஊழ் மதி போர் முடித்து
ஆன்மச்சிறை உடைத்து
எது மோட்சம்? என்று வினவினால்
போதும்! போதும்! என்றே பதிலே கிடைக்கும்
அகக்கண்ணாடி பார் தெரியும்
பற்றற்றவனாய்
பொய்மனத்தில்
எது தெளிவு?
நாதசோதியாய்
ஒளிக்குள் புகுந்துவிடு
ஆன்மத்துடிப்பு அதுதான்
திறவுகோலும் அதுதான்
புதியகிழவனாய் மடியாமல்
இணைந்திடு பேரொளிக்குள்
பாதுகாப்பு வேலி, வேடிக்கை! வேடிக்கை!
விட்டுவிலகு
வீடுபேறு அடைந்திட!