About Us

Our Author
Udaya.Kathiravan / உதய.கதிரவன்
Author

உதய.கதிரவன் (கதிரவன் உதயகுமார்) பன்முகத் திறன் கொண்ட கவிஞர், பாடலாசிரியர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். சமகாலச் சூழலுக்குப் பொருந்தக்கூடிய பழங்காலப் படைப்புகளின் மொழிபெயர்ப்பின் மூலம் பல்வேறு வகையான பங்களிப்புகளில் இலக்கியம் மற்றும் கலைப் படைப்புகளில் புதிய பரிமாணங்களை உதய.கதிரவன் ஆராய்ந்து வருகிறார்.

அவரது கவிதை வெளியீடுகள்:

1. கதிரின் கவிதைகள் (2018)
2. ஆண்பாவம் (2020)
3. சுருக்குபை (2020)
4. Jingle and Tingle (2020)
5. Pensive (2020)
6. Thought Shower (2021)
7. வாலறிவன் (2023)
8. iCues (2023)

மொழிபெயர்ப்புகள்:

1. போர்க்கலை - ‘The Art of War by Sun Tzu’ (2019)
2. கபீர் கவிதைகள் (2021)
3. ரூமி கவிதைகள் (2021)
4. ஜிப்ரான் கவிதைகள் (2021)
5. ஆட்சிக்கலை – ‘The Prince by Niccolo Machiavelli’ (2022)

artist

 

artist
Dr.P.Udayakumar / டாக்டர் பா.உதயகுமார் (உதயன்)
Author

பேராசிரியர், கவிஞர் டாக்டர் பா.உதயகுமார் (உதயன்) சென்னை எழுமூரில் 16.01.1952 அன்று பிறந்தவர். சென்னை செனாய்நகர், திரு.வி.க. உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியும், பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை (U.G) முதுகலையும்(M.A) பயின்றவர். பயிலும் காலத்தில் இவர் தம் கவிதைத்திறத்தை ஊக்குவித்தவர் பேராசிரியர், கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம் ஆவார். மாணவர் நிலையில் செனாய்நகர் இலக்கிய நண்பர் குழாமின் தலைவராகவும், பொதிகைத் தமிழ் மன்றத்தின் செயலராகவும் விளங்கியவர். தன் பன்னிரண்டாம் வயதில் எழுத்தாளர் ஜெயகாந்தனின் தேசிய விருது பெற்ற ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்தவர். (1965) முதுகலை முடித்தபின், சென்னை வானொலி நிலையத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக விளங்கியவர். வானொலி, தொலைக்காட்சி கருத்தரங்கள், கவியரங்களில் பங்கேற்றுள்ளவர். முதன் முதலாகத் திரைப்படப்பாடல் குறித்துச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு, ‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்- ஒரு திறனாய்வு’ என்ற ஆய்வுக்கு ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டம் பெற்றவர். தொடர்ந்து அறிஞர் அண்ணாவின் படைப்புகள் குறித்து ஆய்வு மேற் கொண்டு முனைவர் (Ph.D) பட்டமும் பெற்றுள்ளவர். (1983) சென்னை, ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தில் ஆய்வறிஞராகப் பணியாற்றி, அந்நிறுவனம் உருவாக்கிய தமிழிலக்கியம் குறித்த ஆங்கிலக் கலைகளைஞ்சியத்திற்கு எண்ணற்ற பதிவுரைகள், ஆய்வு கட்டுரைகள் வழங்கியுள்ளவர்.

1984 ஆம் ஆண்டு முதல், வேலூர், தருமபுரி, செய்யாறு ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப்பணியாற்றி, 1996 முதல் சென்னை, மாநிலக் கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி 2010 ஆம் ஆண்டு ஒய்வு பெற்றுள்ளவர். இவர் தம் மேற்பார்வையில் பத்துக்கு மேற்பட்டோர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் (Ph.D) நாற்பதுக்கு மேற்பட்டோர் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டமும் பெற்றுள்ளனர். திறனாய்வு நூல்கள் ஆறும், மொழி பெயர்ப்பு நூல் ஒன்றும், கவிதை நூல்கள் ஐந்தும் படைத்துள்ளவர். வலம் வரும் தீபங்கள், நயனச் சிற்பிகள் என்ற தலைப்பிலான நூல்கள் எம்.ஏ பட்ட வகுப்பிற்குப் பாடங்களாக இருந்துள்ளன. அண்ணாவைப் பற்றிய இவர் தம் ஆய்வுநூல் பலருக்கு நெறி காட்டும் நூலாகியுள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இவர்தம் கவிதைகள் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஆய்வு மேற் கொள்ளப் பட்டுள்ளன. பல்கலைக் கழக மானியக் குழுவின்(UGC) உதவியுடன் பெருந்திட்ட வரைவாகப் (Major Project) ‘புறப் பொருள் சொற் பொருள் விளக்கக் களஞ்சியம்’ என்ற தலைப்பில் ஆய்வுநூல் வழங்கியுள்ளவர். இவர் தம் ஆசிரியர் பணி, ஆய்வுப் பணிக்காகத் தமிழ்நாடு அரசு உயர்கல்வி மாமன்றம் (TNHEC) ‘சிறந்த ஆசிரியர் விருது’ வழங்கிச் சிறப்பித்துள்ளது. (2008) சென்னை, கம்பன் கழகம். இவர்தம் துணைவியார் பேராசிரியர், டாக்டர் கு. மங்கையர்க்கரசியின் பணியையும் சிறப்பித்து ‘இலக்கிய இணையர்’ பட்டமும் நல்கியுள்ளது.

Email
info@arrivanbooks.com
instagram
instagram
instagram
instagram
instagram
instagram